நேர்மறையான எண்ணங்களின் சக்தி !
நன்றி: The World Renewal, Magazine மானிட பிறவிகளாகிய நாம் நேர்மறையான நடுநிலைமையிலுள்ள அல்லது எதிர்மறையான எண்ணங்களைக் கொண்ட தனிப்பட்ட திறமையை உடைய மற்றும் சிறப்பான (அசாதாரணமான) மனிதர்களாவோம். ஆரம்ப நிலையில் ஒவ்வொரு ஆத்மாவும் இந்த உலக நாடகத்தில் தன் வாழ்க்கை பயணத்தை மிகவும் பரிசுத்தமான மற்றும் நேர்மறையான எண்ணங்களுடனே தொடங்கியது. எடுத்துக்காட்டாக (உதாரணமாக) தங்க யுகத்தில் (சத்யுகத்தில்) இருந்து முதல் முடிசூடிய இளவரசன் ஸ்ரீகிருஷ்ணன் நேர்மறையான எண்ணைங்கள் மற்றும் தொடர்ந்த நற்செயல்பாடுகள் மூலமாக அனைத்துவிதமான மக்களையும் வளமாக்கினார்.
- Published in Article – List
வெளிப்பாடுகள் மற்றும் அனுபவங்கள் !
நன்றி: The World Renewal, Magazine நமது வாழ்க்கையின் நோக்கத்தை சுருங்கக் கூறினால் இரண்டு வார்த்தைகளில் கூறிவிடலாம். ஒன்று வெளிப்படுத்துதல். மற்றொன்று அனுபவம். நாம் ஒவ்வொரு செயலையும் செய்யும் போதும் நமது ஆத்மாவின் குணத்தை வெளிப்படுத்துகிறோம். அதே சமயம் இந்த பிரபஞ்சத்தின் குணங்களை மனிதர்கள் மற்றும் இயற்கையின் மூலம் நாம் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த அனுபவம் நாம் விடுமுறையை கழிக்க வெளியூர் செல்லும் போது கிடைக்கலாம். நமது பயணத்தின் முக்கிய நோக்கமானது அமர்வது, ஒய்வு எடுப்பது மற்றும்
- Published in Article – List
நம்பிக்கை மற்றும் ஞானத்தின் சக்தி
நன்றி: The World Renewal, Magazine நம்பிக்கை எவ்வளவு மாயாஜாலமாக சில நேரங்களில் நம் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மில் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஞானம் மற்றும் பணிவோடு கூடிய நம்பிக்கை நம் வாழ்வை கவனத்தோடும், தைரியத்தோடும் வழி நடத்திச் செல்கிறது. தடைகளயும், சவால்களையும் தாண்டி நம்பிக்கையனது நம்மை, நம் சொந்த வாழ்விலும், தொழில் மற்றும் ஆன்மீகம் சார்ந்த வாழ்க்கையிலும் வெற்றியின் உச்சிக்கே நம்மை கொண்டு செல்கிறது. நம்பிக்கை என்ற சோதனையில் உச்சம் நமக்கு மதம் மற்றும்
- Published in Article – List
சவால்கள் – சக்திகள்
-பி. கு. ஆஷா, நாகமலைபுதுக்கோட்டை பெண்கள் சக்தியின் அவதாரம் என்றழைக்கப்படுகிறார்கள். வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு வெற்றி அடைவதற்கான அனைத்து சக்திகளும் பெண்களிடம் புதைந்திருக்கின்றன. புதையலை கண்டுபிடித்து வாழ்க்கையில் பயன்படுத்தும்போது தான் சவால்களை சாதனைகளாக மாற்ற முடியும். சவால்களை சமாளிப்பதற்கு பதில் எதிர்கொண்டு தீர்வு காண்பதற்கு உடல் பலம், மன பலம் மிக அவசியம். பெண்கள் சரியான நேரத்தில் உணவு அருந்த வேண்டும். போதுமான அளவு ஓய்வு, தூக்கம் அவசியம். சில பெண்கள் குடும்பத்தை கவனிப்பதில் ஈடுபட்டு தன்னை
- Published in Article – List
வாழ்க்கை ஒரு மாரத்தான் விளையாட்டு
-பிரம்மா குமாரர். செண்பகராஜ், மதுரை வாழ்க்கை ஒரு விளையாட்டு. விளையாட்டில் பொதுவாக மகிழ்ச்சியிருக்கும், பல விசயங்களை மறப்பதால் குஷியிருக்கும், வெற்றித் தோல்வியைச் சகஜமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவமிருக்கும், விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை இருக்கும், உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்தின் இரகசியமும் பொதிந்திருக்கும், சிந்தனை சக்தி தெளிவுபெறும், விளையாட்டில் இலயித்து இருப்பதால் மனம் அமைதியில் திலைத்திருக்கும். மாரத்தான் என்ற ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் வாழ்க்கையின் பல நிலைகளைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பல பிரச்சனைகளைத் தாண்டி வாழ்க்கைப்பாதையில் நாம்
- Published in Article – List
வாழ்க்கை வாழத்தான்! வீணடிப்பதற்கல்ல!
– பி.கு. செண்பகராஜ், பிரம்மா குமாரிகள், மதுரை இன்றைய காலக்கட்டத்தில் கடன் தொல்லை, குடும்ப வறுமை, தொழிலில் நஷ்டம், தோல்வி, தேர்வில் தோல்வி போன்றவற்றால் தற்கொலை செய்துகொள்வது பத்திரிக்கைகளில் தினமும் வரும் தவறாத செய்தியாகி விட்டது. இந்நிலையில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ஓர் அதிர்ச்சித் தகவலில், 2014- ஆம் ஆண்டின் நிலவரப்படி, இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 15 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம், தமிழகம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாம். பெருநகரங்களில் தற்கொலை எண்ணிக்கையில் சென்னையே முதலிடம் வகிக்கின்றதாம்! விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள்
- Published in Article – List
என் வாழ்க்கை என் கையில் !
– பி. கு. லதா, மதுரை தினமும் அதிகாலை எழுந்து இறைவழிபாட்டுடன் வாழ்க்கையை துவக்க வேண்டும். “பசித்திரு, தனித்திரு, விழித்திரு” என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும். “பசித்திரு” என்பது தேடல். “தனித்திரு” என்பது இறைவனோடு ஒன்றியிருத்தல். “விழித்திரு” என்பது நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உள்வாங்கி விழிப்புடன் இருத்தல். அன்றாடம் நமது தேடல் தொடர வேண்டும். நல்ல விஷயங்களைத் தேடி ஓட வேண்டும்.இதுவே நமது வாழ்க்கைக்கும் சமுதாய மேம்பாட்டுக்கும் உதவும். பணம், பொருள், ஞானம் என
- Published in Article – List
பெண்மை போற்றுவோம்
(உலக மகளிர் தினம் – மார்ச் 8) பி. கு. ஜனனி, மதுரை பெண் வீட்டின் அஸ்திவாரம். பிறரை முன்னேற்றும் பூஜிக்கப்பட வேண்டிய தேவதை. அலுவலகப்பணி, அடுப்படிப்பணி இரண்டையும் கவனித்தாலும், இதயத்தில் சோர்வு இன்றி சேவை செய்பவள். பெண் இருக்கும் வீட்டில் குடும்ப விளக்கு குவலயத்து விளக்காய் பிரகாசிக்கும். தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெண்களை குறிப்பிடும் போது, உயர்பதவியில் இருப்போருக்கு பயன்படுத்தப்படும் “மாண்பு” என்ற சொல்லையே உபயோகித்தார். இந்தியாவில் பெண் தெய்வங்களே அதிகம். நதிகள் பெரும்பாலும்
- Published in Article – List
உயரத்தில் பறக்கலாம்
பி . கு . உஷா ராணி, மதுரை இளைய சமுதாயமே! லட்சியத்தை முதலில் தேடு. “சாதிக்கப் பிறந்தவன் நான்” என்ற மந்திரத்தை அடிக்கடி சொல். குறிக்கோளை அடைய வேண்டும் என்ற தன் முனைப்போடு செயல்படு. “என்னால் முடியும்” என்னும் நம்பிக்கை முழக்கம் உனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். இந்த பண்புகளை வலியுறுத்தும் லட்சிய வீரர் ஒருவரின் வாழ்வில் நடந்ததை பார்ப்போம். ரஷ்யாவின் விமானப்படையில் பைலட்டாக பணிபுரிந்தார் ஓர் இளம் வீரர். பன்னாட்டு போர்
- Published in Article – List
அர்த்தமுள்ள ஆன்மிகம்
பி.கு. செண்பகராஜ், மதுரை ஆன்மிகம் என்ற சொல்லே மிக அருமையானது. பழக்கமான ஒரு பிடித்தமான சொல் என்றே சொல்லலாம். இதில் பலன் அதிகம் உண்டு என்று அனைவருக்கும் தெரிந்த உண்மை. அந்த ஆன்மிகத்தைப் புரிந்து கொள்வதற்கே ஓர் அலாதியான ஆர்வம் வேண்டும். ஆன்மிகத்தை அறிந்து கொள்ள ஆன்மிக சக்தியும் அவசியம். இது அடிப்படையான ஒன்று என்பதையும் யாரும் மறுப்பதில்லை. ஏனெனில் மனிதநிலையே, கண்களுக்கு தெரிந்த ஐந்து அழியும் தத்துவங்களால் ஆன உடலாலும். அழிவற்ற ஆத்மாவாலும் (உயிராலும்) ஆனதாகும்.
- Published in Article – List