இன்றே செய்வோம் ! தள்ளிப்போட வேண்டாமே !
பி.கு. செண்பகம், பிரம்மா குமாரிகள், மதுரை வியாபாரி ஒருவன் கடை தெருவில் ஒரு விசித்திரமான அறிவிப்பு பலகையை பார்த்தார். அதில் குறிப்பிட்டிருந்தது இங்கு “ஒரு பொன்மொழிக்கு 200 பொன்”. அதாவது 200 பொன் கொடுத்து ஒரு பொன்மொழியை கேட்டுக்கொள்ளலாம். வியாபாரிக்கு அதுபற்றி அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. உள்ளே சென்று விசாரித்தார். 200 பொன் கொடுத்தால் தான் கூறப்படும் என்றார்கள். அந்த நேரத்தில் அவருக்குள்ளே ஆர்வம் அதிகமாக இருந்ததால் 200 பொன் பெரிதாக தெரியவில்லை. ஆகையினால் 200
- Published in Article – By story
கொடுப்பது என்றால் பெறுவது
பி .கு உஷா ராணி, மதுரை நன்றி: Purity Magazine பூலோக வாழ்க்கையில் வெறுப்படைந்து, விரக்தியடைந்த ஒருவன் கடல் பயணம் மேற்கொண்டான். குறிக்கோளில்லாமலேயே புறப்பட்டதால் படகில் தேவையான பொருட்களோ, வரைபடமோ, திசைகாட்டும் கருவியோ எடுத்துச் செல்லவில்லை. படகு வேகமாக சென்று கொண்டிருந்தது. கடற்கரையும் கண்களிலிருந்து மறைந்து விட்டது. நாலா பக்கமும் நீர்ப்பரப்பைத் தவிர வேறொன்றுமே இல்லை. இருளும் வெளிச்சமும் மாறி மாறி வந்தன. திக்குத் தெரியாத நடுக்கடலில் நாட்கள் பல கழிந்துவிட்டன. இப்போது அவனுக்கு துணையாக இருந்தது
- Published in Article – By story
வைர வாழ்க்கை
பி.கு. தீபா, மதுரை ஒரு நாள் ஒரு இளைஞன் தன் தந்தையிடம் “என் வாழ்க்கையின் மதிப்பு என்ன?” என்று கேட்டான். பதில் கூறுவதற்கு மாறாக தந்தை கூறினார், “ மகனே! இந்த கல்லை எடுத்துக் கொண்டு சந்தைக்கு போ. யாராவது விலை என்னவென்று கேட்டால் இரண்டு விரலை மட்டும் நீட்டு, மற்றபடி ஒன்றும் பேசாதே!”. இளைஞன் சந்தைக்குப் போனான். ஒரு பெண்மணி அவனிடம் , “ இந்த கல் என்ன விலை? நான் இந்தக் கல்லை என்
- Published in Article – By story
உழைப்பே உயர்வு
அரசன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான். அவர்களுக்கு தன் வீட்டிற்கு வந்து தங்கி இருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் என நினைத்து தங்க வசதி செய்து கொடுத்தார்கள். அரசன் காலையில் எழுந்த போது நெசவாளி தனது வேலையைத் தொடங்கி இருந்தான். அவனது இடக்கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியிடம் “இது என்ன, உனது இடக்கையில் கயிறு” என்று
- Published in Article – By story
சுமைதாங்கி !
பி. கு. உமா தேவி, மதுரை ஒரு காட்டில் குடிசை ஒன்றில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டு இருந்தார். அவரிடத்தில் இரண்டு பேர் வந்தனர். அவரிடம் ஐயா ரிஷி அவர்களே, நாங்கள் பாவங்கள் செய்துள்ளோம். அதனை போக்க ஏதாவது உபாயம் உள்ளதா என்று கேட்டனர். அதற்கு அந்தமுனிவர் அவர்களிடத்தில் நீங்கள் இருவரும் செய்த பாவங்களை கூறுங்கள். பிறகு அதை போக்க வழிகள் கூறுகின்றேன் என்றார். வந்தவர்களில் ஒருவர், தவசி அவர்களே நான் ஒருவரைகோபத்தால் கொன்றுவிட்டேன். நான்
- Published in Article – By story
இராஜா மற்றும் துறவி
பி. கு. லதா, மதுரை துறவி ஒருவர் எப்போதும் ஒரு மரத்தடியில் அமைதியாக அமர்ந்திருப்பார். அந்நாட்டு இராஜா ஒவ்வொரு நாள் இரவும் தன் நகரத்தில் அனைத்தும் சரியாக உள்ளனவா என்று பார்க்க உலா வருவார். அப்போது அந்த இளம் துறவி எந்த ஒரு அசைவும் இல்லாமல் சிலை போல அமர்ந்திருப்பதைப் பார்ப்பார். ஒரு நாள் தனது குதிரையில் இருந்து இறங்கி வந்து “சுவாமி, தங்களது தவத்தை கலைத்ததற்கு மன்னிக்க வேண்டும்” என்றார். துறவி கண்களைத் திறந்து, “
- Published in Article – By story
இறைவன் கொடுக்கின்றார்
நன்றி : சங்கமயுகம் தாராள மனமுடைய இராஜா நகுவர் ஆந்திர மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வந்தார். தினமும் இரண்டு பிச்சைக்காரர்கள் அவரிடம் பிச்சை கேட்க, அவர் தினமும் உணவும் பணமும் கொடுப்பார். பிச்சையை பெற்றுக் கொள்ளும் போது, அவர்களில் ஒருவரான முதியவர், ‘இறைவன் கொடுத்தார்’ என்று வழக்கமாகச் சொல்வார். இளையவரான அடுத்தவர் ‘அரசர் கொடுத்தார்’ என்று சொல்வார்.ஒரு நாள் இராஜா வழக்கத்தை விட அதிக பணம் கொடுத்தார். உடனே மூத்தவர் சத்தமாக, ‘இறைவன் கொடுத்தார்’ என்று கூறினார். இது
- Published in Article – By story
பணிவு வேண்டும்
– பி.கு. லதா, பிரம்மா குமாரிகள், மதுரை ஒரு கிராமத்தில் முகுந்தன் என்ற இளைஞன் வசித்து வந்தான். படிப்பறிவு இல்லாத அவன் சலவைத் தொழில் செய்து வந்தான். கிராமத்தின் அருகிலுள்ள நகரத்திற்குச் சென்று அங்குள்ள மக்களின் துணிகளை வாங்கி வந்து துவைத்துக் கொடுப்பது அவனது வேலையாகும். துவைப்பதற்கு ஆற்றங்கரைக்குச் செல்ல வேண்டுமென்றால் நான்கு கிராமங்களை கடந்து செல்ல வேண்டும். தினமும் அதிகாலையிலேயே முகுந்தன் தனது கழுதையுடன் புறப்பட்டுவிடுவான். ஒரு நாள் ஆற்றங்கரையில் துணி துவைத்து முடித்து விட்டு
- Published in Article – By story
ஒற்றுமையே பலம் !
– பி.கு. குணசுந்தரி, பிரம்மாகுமாரிகள், தூத்துக்குடி ஒரு மாலைப் பொழுதில் மழை நேரத்தில் வர்ணங்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. மரம், செடி, கொடி, புல் அனைத்திலும் எனது வர்ணம் தான் இருக்கின்றது நான்தான் பெரியவன் என்று பச்சை வர்ணம் சொல்லியது. வானம், கடல் அனைத்தும் நீல வர்ணம் தான் நான் தான் உயர்ந்தவன் என்று நீல வர்ணம் சொன்னது. அனைத்து மனிதன், விலங்குகளுக்குள் ஓடுவது சிவப்பு நிற இரத்தம், எனவே நான் தான் பெரியவன் என்றது
- Published in Article – By story
– பி.கு. குணசுந்தரி, பிரம்மாகுமாரிகள், தூத்துக்குடி “பொறுத்தார் பூமியாள்வார்” என்பது ஆன்றோர் வாக்கு. அனைத்து நற்குணங்களுக்கும் அடிப்படையானது மற்றும் அத்தியாவசியமானது பொறுமை குணம் ஆகும். “பொறுமை கடலிலும் ஆழமானது”. எனவே எதுவரை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற எல்லை கிடையாது. வாழும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். நான் பொறுத்து, பொறுத்துப் பார்த்தேன் கடைசியில் நானும் இரண்டு வார்த்தை நன்றாகக் கேட்டு விட்டேன் என்கின்றார்கள். அவர்கள் இதுவரை பொறுமையாக இருக்க ஆரம்பிக்கவில்லை என்று தான் அர்த்தம்.
- Published in Article – By story
- 1
- 2