நன்றி: The World Renewal, Magazine
- இது உங்களது ‘கர்மம்’ என்று நினையுங்கள்!
- உங்களுடன் நீங்கள் இருப்பதை அனுபவிக்கும் ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்புகளில் இதுவும் ஒன்று என்று நினையுங்கள்.
- போக்குவரத்தின் வேகம் குறையும்பொழுது உங்களது எண்ணங்கள் குறைவானதாக கற்பனை செய்யுங்கள்.
- பிரேக்கை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், எதிர்மறையான எண்ணங்களுக்கு பிரேக் போடுவதாக கற்பனைசெய்யுங்கள் .
- எனது எண்ணங்கள் வேகமாக இருப்பின், பயணம் நீண்டதாகத் தோன்றும்.
எனது கவலைகள் எனது இலக்கை விரைவாகச் சென்றடையச் செய்யுமா என்று உங்களை நீங்களே வினவுங்கள். ‘ஆம் ‘என்பது பதில் என்றால் பின்னர் இரு மடங்கு கவலை கொள்ளுங்கள்.
- எந்த அளவிற்கு அதிகமாக நான் கவலை கொண்டிருப்பேனோ அந்தளவு நான் இலக்கைச் சென்று சேர்ந்த பின் அடையவேண்டிய மகிழ்ச்சியை விடக் குறைவாகவே அனுபவிப்பேன்.
- ஒரு பயணம் என்பது இலக்கைச் சென்றடைவது மட்டுமல்ல, ஆனால், வழியில் கற்ற அனைத்து பாடங்களால் மகிழ்வுற்றுஇருப்பதுமாகும்.
- நாம் அனைவரும் வாழ்க்கைப் பயணத்தின் பிரயாணிகள். சில நேரங்களில் மெதுவான பயணம் நம்முடைய கையிருப்பைசோதிக்கும் வாய்ப்பை நல்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் .
- உங்களுடைய ஒலிப்பானை ஊதாதீர்கள்! (தற்பெருமை செய்யாதீர்கள் )